Jul 22, 2011

காப்பி அடிக்க பயப்படும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே. 

ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து விட்டு "பத்து வருடத்திற்கு முன்னாலேயே நான் இந்த கதையை யோசித்தேன் என்று அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போல"  கூச்சப் படாமல் பந்தாவாய் நடிகைகளுடன் உட்கார்ந்து டிவிகளில் பேட்டி கொடுக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது 

சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.

தமிழில் சொந்தமாய் கதை யோசித்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹரி, லிங்குசாமி, பேரரசு போன்ற ஒரு சிலரே.

"ஏன் இந்த இயக்குனர்கள் கவலைப் படாமல் காப்பி அடிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு முண்ணனி ப்ளாகர் ஒருவர்,

"தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம். இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம். படித்த மக்களின் அறிவே இன்னும் தமிழ்நாட்டை தாண்ட வில்லை. இன்னும் அவர்கள் கமலையும், ரஜினியையுமே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் இருண்டகாலம் ஆகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த ஆண்டவனாளையும் காப்பாற்ற முடியாது."  என்று
பதிலளித்தார். 

இது போல படைப்பு திருட்டுகளை (plagiarism) ஒழிக்க, பிரபல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்தந்த ஒரிஜினல் படங்களை எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பி இத்திருட்டைப் பற்றி தெரிவிக்க ஆலோசித்துள்ளார்கள்.

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் போல, இது மெயில் அனுப்பும் போராட்டம். 

வரும் ஞாயிற்றுக் கிழமை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் பதிவர்கள் கூடி, சரியாக நாலு மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் இன்டர்நெட் கனெக்சனுடன் கூடிய லேப்டாப்பில் இருந்து மெயில் அனுப்புவார்கள்.

மெரினாவுக்கு வரமுடியாத நபர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அருகில் உள்ள ப்ரொவ்சிங் சென்டர்களில் இருந்தோ மெயில் அனுப்பலாம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கமே ஆடி போயிருக்கிறது.                                     



காப்பியடித்து படம் எடுத்து விட்டு கர்வத்துடனும், சிலசமயம் தன்னை யாரும் கொண்டாடவில்லையே என ஆதங்கத்துடனும் அலையும் மிஸ்கின் அவர்கள் தன் ரூமில் உலகப் படங்களின் சிடிக்கள் சிதறிக் கிடக்க, குவார்ட்டர் அடித்து நிலைகுலைந்து போயிருக்கிறார். ஒரு வாரம் அவர் தன்னுடைய கருப்பு கண்ணாடியை போடாமல் சுற்றி அலைந்ததாக தெரிகிறது.


 
"மங்காத்தாவின்" இறுதி கட்ட வேளைகளில் மூழ்கி இருந்த வெங்கட் பிரபுவோ, திரிஷாவிடம் போன் செய்து புலம்பி உள்ளார். தமிழ் ராப் இசை கலைஞன் பிரேம்ஜியும் அவருக்கு ஆதரவாய் திக்கி திக்கி நாலு வார்த்தை பேசியுள்ளார்.



இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, கவுதவ் மேனன் அவர்கள் இரண்டு நாளாக சரியாக சாப்பிடவில்லையாம். தெய்வத் திருமகள் விஜய் அவர்கள், "விண்ணை தாண்டி வருவாயா" ஹிந்தி படப் பிடிப்பில் இருக்கும் எமி ஜாக்ஸனிடம் சாட் செய்து தன் மனகுமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.



எதோ ஒரு உலகப் படத்தை உருவி, அந்த கதையை எப்படி மாற்றி கொத்து பரோட்டா போடலாம் என சீரியஸாக கதை விவாதத்தில் இருக்கும் "மாற்றான்" படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த், இந்த படத்தை ட்ராப் பண்ணி விடலாமா என யோசித்து வருகிறார்.

இதனால் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவரும் அடுத்து எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஆங்கில காப்பி படங்களில் நடிக்கும் உலக நாயகன் கமல் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவரின் எதிர்காலமும் இதனால் கேள்வி குறியாகி உள்ளது.

சாதரணமாக தமிழ் பாடல்களை ரீமேக் பண்ண மறுத்து, ஆங்கில பாடல்களை மட்டுமே காப்பி அடிக்கும் ஜீவி பிரகாஷ் அவர்கள் இந்த மெயில் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

தங்கள் தகிடு தத்தங்களை உலகுக்கு தெரிவிப்பதில் கூகுளின் பிளாகரும், வோர்ட் பிரஸ்சும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? எனவும் கனவு காண்கிறார்கள்.







இனி ஹரி, லிங்குசாமி, பேரரசு காட்டில் மழை தான். அவர்களின் படங்களில் நடிக்க இனி ஒவ்வொரு ஹீரோவும் "அவன் இவன்" விஷால் ஆர்யா போல கட்டி புரண்டு சண்டை போடுவார்கள்.


18 comments:

  1. சூப்பர் வாஇ விட்டு சிரிச்சேன்...

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  3. சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே.
    //அப்ப இதுக்கு முன்னாடி வெளிவந்த தமிழ்படங்கள் எதுமே உலகபடங்களில் இருந்து திருபடாதவையா.//

    சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை
    அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.
    காஸ்டியுமையும், முடி அலங்காரத்தையும் மாத்தினா மட்டும் பேசமா இருந்துருவிங்களா?

    "தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம்
    ஏன் பணத்தை தமிழ் படத்துக்கு தண்டம் போட்டது காணாதா? இதுல உலக படத்துக்கு வேற தண்டம் போடனுமா?

    //இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம்//
    நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா
    உலக படங்களை தமிழில் கொடுத்தா என்ன தப்பு, உனக்கு பிடித்தால் பாரு இல்ல போகாத பார்க்காத
    இல்ல தெரியாம கேட்கிறேன் காலிவுட் தயாரிப்பாளர்கள் எல்லாம் உங்ககிட்ட வந்து அழுது புலம்பினார்களா.
    உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், நமக்கு கொடுக்கவேண்டிய தண்ணிர் உரிமையை கொடுக்க மறுக்கானுங்க கன்னடகாரன்களும், மலையாளத்தான்களும்.
    பலமுறை சொல்லியும் நம் தமிழ் மீனவர்களை சுட்டுகொண்டிருக்கிறான் இந்த ஈன இலங்கை கடற்படை அதை வேடிக்கை பார்க்கிறது இந்த ஈன இந்திய அரசு, நம் வரி பணம் எல்லாம் இந்திய அரசு விரயம் செய்கிறது இது எவ்வளவு பெரிய கொள்ளை கூட்டல் அயோக்கியதனம்.
    அதுபோதாதுனு இப்ப இலங்கை ராணுவத்துக்கு கூடுதல் பயிற்ச்சி கொடுக்க இந்தியா ஆயத்தமாகியுள்ளது, ஏன் பாக்கிஸ்தானுக்கு கொடுக்க வேண்டியதானே(மன்னிக்கனும் வாதத்தை விட்டு விலகியதற்க்கு).

    அந்த மக்களால் குப்பை படங்கள் என்று சொல்லபடும் எண்ணற்ற படங்கள் பல நாடுகளில் வசூலை குவிக்கிறது,
    சினிமாங்கிறது ஒரு பொழுபோக்கு யார் கருத்தையும் யார்மேலையும் திணிக்கமுடியாது, எனக்கு விஜய் படம் பார்த்தால்(ஒரு சில படங்கள் திவிர) அவ்வளவு கோபம் வரும் ஆனால் எங்க விட்டு வாண்களுக்கு அவன் பாட்டு என்றால் அவ்வளவு இஷ்டம் என்னத்த சொல்ல,
    இவ்வளவு ஏன் நான் மும்பையில் இருக்கும்போது அங்கும் கூட விஜய் பாட்டுக்கு அவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது விஜய்யை மன்னித்துவிடலாம் என்றுதான் தோன்றியது, உண்மையில் எனக்குதான் விஜய்யை பிடிக்கவில்லையோ என்று தோன்றியது.

    சரி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த ஆங்கில நகல்படங்களை பற்றிய பயத்தை புறம்தள்ளுங்கள், அதுபோல் அன்னியமொழிக்கு அளவாக செலவழியுங்கள், ஏன் என்றால் அந்த சினிமா தொழிலை நம்பி பல குடும்பம் வாழ்கிறது.
    எதேனும் கடிந்து பேசியிருந்தால் மன்னிக்கனும்(Kindly make the default Type in as Tamil)

    ReplyDelete
  4. @Pandi
    \\உலக படங்களை தமிழில் கொடுத்தா என்ன தப்பு\\ ஏன் சார், உன் வீட்டுக்குள்ள வந்து திருடினா என்ன தப்புன்னு கேட்பீங்க போலிருக்கே. நமது நாட்டில் சட்ட திட்டங்கள் இருப்பது போல நாடுகளுக்கிடையேயும் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதை மதித்து நடக்க வேண்டும். மீறுவது குற்றம். மேலும் தமிழகமும் தமிழர்களும் சந்தித்து வரும் பற்றி எரிகிற சில பிரச்சினைகளை இங்கே கூறியுள்ளீர்கள், அதெல்லாம் தீர்ப்பதை விட்டுவிட்டு
    இப்படி வெட்டியாக இணையத்தில் சினிமா பற்றிய ஒரு பதிவுக்கு இவ்வளவு பெரிய்ய்ய்ய பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே?

    \\சினிமாங்கிறது ஒரு பொழுபோக்கு யார் கருத்தையும் யார்மேலையும் திணிக்கமுடியாது\\ அதுக்காக இன்னொருத்தருடைய கதையைத் திருடுவது நியாயமாகாது. இது அடுத்தவரின் பொருளைத் திருடுவதற்கு சமம்.

    ReplyDelete
  5. நீங்கள் ஒரு முட்டாள் என்றே கூறுவேன்.காரணம் நம் பாரதியார் வெளிநாட்டு நல்லறிஞகர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார் .நீங்கள் சொல்வது போல் உலக சினிமாவை நன்றாக பார்க்கும் ஒருவன் தான் நான் ஆனால் என் நண்பர்கள் பலருக்கு ஆங்கிலம் தெரியாது அவர்கள் இது போன்ற படைகளை பார்க்க முடிவதில்லை அது தமிழ் ஆக்கபடுவதால் அவர்களுக்கும் பார்க்க முடிகிறது .நீங்க வெள்ளையனுக்கு பிறந்தவர் உமக்கு எல்லாம் புரியும் .நீங்கள் பிறந்தது முதல் எல்லாம் சுயமாக செய்பவர் வாயை மூடும் mr .வெள்ளையனே

    ReplyDelete
  6. தயுவ செய்து கொடுங்கள்,அந்த வெப்சைட் அட்ரஸ் கொடுங்கபா............
    என் மெயில் முகவரி:

    aaju.aaju2@gmail.com

    ReplyDelete
  7. ஆங்கில படங்களை திருடும் தமிழ் சினிமா இயக்குனர்களை பற்றிய நல்ல பதிவு.
    @Jayadev Das கருத்து மிகவும் சரி.

    ReplyDelete
  8. "வந்துட்டாரு சுயமாக யோசிக்கும் வெள்ளையன் "

    ReplyDelete
  9. /*\\உலக படங்களை தமிழில் கொடுத்தா என்ன தப்பு\\ ஏன் சார், உன் வீட்டுக்குள்ள வந்து திருடினா என்ன தப்புன்னு கேட்பீங்க போலிருக்கே.*/
    டேய் மரமண்ட அததாண்டா சொல்லுறேன், நம்ம வீடு தீ பிடிச்சி எரிஞ்சிகிட்டுபோது வேறு ஒருவன் வீட்டு திருட்டைபத்தி பேசுறிய நீ என்ன பைத்தியமா?
    /* நாடுகளுக்கிடையேயும் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதை மதித்து நடக்க வேண்டும், மீறுவது குற்றம் */
    இதோடா!!! சொல்லிட்டாரு ஐ.நா தலைவர் பான்.கீ.முன்.
    எந்த காலிவுட் திரைபட துறையினராவது தமிழ் திரைபட துறையினர் மிது வழக்குபோட்டதாக ஒரு செய்தி உண்டா?
    அப்பறம் என்ன டஷ்க்காக அதபத்தி பேசுற.
    நம்ம வீட்டு முற்றத்தில் குருவிகள் சில வந்து உணவு தாணியங்களை கொத்தி திண்பதை திருட்டு என்று சொல்ல முடியாது, ஏன் என்றால் அது நமக்கு பெரிய இழப்பு இல்ல அதுபோல் காலிவுட் திரைபட துறையினர் எண்ணியிருக்கலாம்!

    /*தமிழகமும் தமிழர்களும் சந்தித்து வரும் பற்றி எரிகிற சில பிரச்சினைகளை இங்கே கூறியுள்ளீர்கள், அதெல்லாம் தீர்ப்பதை விட்டுவிட்டு
    இப்படி வெட்டியாக இணையத்தில் பெரிய்ய்ய்ய பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே?*/
    தமிழகமும் தமிழர்களும் சந்தித்து வரும் பற்றி எரிகிற சில பிரச்சினைகள் உனக்கு வெட்டியாக தெரிகிறதா
    பரவாயில்லை, மறப்போம் மன்னிப்போம்

    ReplyDelete
  10. உங்கள் பதிகுக்கு சேர்த்து. நன்றி Jayadev.

    மிஸ்டர் கலைவாணன்,
    அப்போ நம்ம இயக்குனர்கள் எல்லாம் ராபின்ஹுட் மாதிரின்னு சொல்றீங்க. இருக்கிறவன் கிட்டே இருந்து எடுத்து இல்லாதவனுக்கு கொடுக்கிறது. அட என்ன ஒரு சிந்தனை?

    //வாயை மூடும் mr .வெள்ளையனே //

    நான் கருப்பு தாங்கோ!


    நன்றி aaju. கண்டிப்பாக தேடி அனுப்புகிறேன்.

    நன்றி baleno.

    மிஸ்டர் கலைவாணன் அவர்களே,
    "வாணனின் படிக்கற்கள்" என்று அழகான பிளாக் வச்சுருக்கீங்க. வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் இடும் பின்னூட்டம்.............
    அடிக்கடி வந்து திட்டிட்டு போங்க.

    ReplyDelete
  11. @ Pandi

    பேருதான் பாண்டின்னு பார்த்த பேசுறதும் "பாண்டி" மாதிரியே இருக்கே. ஒரு திருட்டை நீங்க நியாயப் படுத்தினா, உங்களை ஏய்ப்பதையும் ஏற்று கொள்ளுங்கள் அன்பரே. \\தமிழகமும் தமிழர்களும் சந்தித்து வரும் பற்றி எரிகிற சில பிரச்சினைகள் உனக்கு வெட்டியாக தெரிகிறதா?\\ இல்லை, அப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றன என்று சொல்லும் "அறிவாளி"யாகிய நீங்கள் அதையெல்லாம் தீர்பதற்க்காக தங்களது பொன்னான நேரத்தைச் செலவிடாமல் இங்கே வந்து சினிமா பற்றிய ஒரு பதிவுக்கு பக்கம் பக்கமாக பின்னூட்டமிட்டு வெட்டியான் வேலை செய்வது தான் ஏன் என்று புரியாவில்லை.

    ReplyDelete
  12. @ KATZ டியர்
    நான் சொல்கிற விடயத்தை நல்ல வாசிங்க நம் பாரதியார் வெளிநாட்டு நல்லறிஞகர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  13. @ KATZ பிறகு உங்களை போல் நுனி வாயில் ஆங்கிலம் பேசும் ஆங்கில படம் பார்க்கும் பீட்டர்கல் சென்னையில் மட்டும்.அதுவும் பிழையான ஆங்கிலம் [ஆபீஸ் ஜாப் லாரி ] அப்படி இருக்கும் போது ஆங்கில படங்களையே பார்க்காத மக்கள் நல்ல கதைகளை பார்க்க இது ஒரு வாய்ப்பு .தெலுங்கு ஹிந்தி மலையாளம் படங்களை ரீமேக் செய்தால் பார்கிறீர்கள் .

    ReplyDelete
  14. @ KALAIWANAN

    நீங்க தெரிஞ்சுதான் பதில் எழுதறீங்களா, இல்லை விஷயமே தெரியாதவரா என்று குழப்பமாக இருக்கிறது. பாரதியார் சொன்னது ஷேக்ஸ்பியர், ஷெல்லி மாதிரி அறிஞர்களின் எழுத்தை. ஏனென்றால் அதை யாரும் காபிரைட் செய்து வைக்கவில்லை, பொதுச் சொத்து. ஆனால் திரைப் படங்கள் அப்படியல்ல, காபிரைட் செய்யப் பட்டவை, மற்றவர்கள் அதன் கதையை திரும்பப் படமாக்க வேண்டுமென்றால் அதற்க்கு உரிய அனுமதியை கதையின் சொந்தக் காரரிடமிருந்து பெறவேண்டும். மீறினால் கதையைத் திருடியவர் மீது கதையின் சொந்தக் காரர் வழக்கு தொடர முடியும்.

    \\அப்படி இருக்கும் போது ஆங்கில படங்களையே பார்க்காத மக்கள் நல்ல கதைகளை பார்க்க இது ஒரு வாய்ப்பு. \\ அப்படி ஒரு அக்கறை உங்களுக்கு இருக்குமானால், படத்தை எடுத்தவரிடம் பேசி அனுமதி பெற்று தமிழில் எடுக்கலாம் தப்பில்லை.

    \\தெலுங்கு ஹிந்தி மலையாளம் படங்களை ரீமேக் செய்தால் பார்கிறீர்கள் .\\ இவற்றுக்கு அந்தந்த கதாசிரியர்களிடம் பேசி தமிழில் எடுக்கும் உரிமையை விலைக்கு வாங்குவார்கள், அதற்க்கப்புறம் தான் படமெடுக்க முடியும். உதாரணத்துக்கு, நாட்டாமை படத்தை தெலுங்கில் எடுத்த போது, அதற்க்கான தொகை தமிழில் எடுத்தவர்களுக்கு கொடுக்கப் பட்டது. சந்திரமுகி முதலில் மலையாளத்தில் எடுக்கப் பட்டது, அதற்க்கப்புறம் கன்னடம், தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் எடுக்கப் பட்டது, அத்தனைக்கும் உரிய அனுமதி பெற்றே எடுக்கப் பட்டது.

    ReplyDelete
  15. சரி நம்ம சண்டை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
    முதலில் இதுல தங்களின் பொன்னான வாக்கை பதிவு செய்யுங்கள்
    http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

    அப்பறம் Jayadev Das நிங்கள் என்ன எப்படி கடிந்துகொண்டாலும் எனக்கு வருத்தம் இல்லை
    ஏன் என்றால் நான் உங்களை உடன்பிறப்பாகதான் பாவிக்கிறேன்.
    இங்கு திருட்டு என்ற விவாதம் செய்யபட்டதால் தமிழும், தமிழர்களும் எந்த அளவுக்கு சுரண்டபடுகிறார்கள் என எழுதினேன்
    அவ்வளவே,முடிந்த அளவு மக்களிடம் இப்படி இனையதளம் வழியாக விவாதிக்கிறேன் இதுவும் ஒருவகையான போராட்டம்தான். நிறைய பொது இடங்களில் தனிமனிதனாக போராடியுள்ளேன்(போராட்டம் என்பது மிக பெரிய வார்த்தை, என் அளவில் சொல்ல வேண்டுமானால் சண்டை பிடித்துள்ளேன் அதைபற்றி எழுதவேண்டுமானால் தனி பதிவே போடவேண்டியது வரும்)ஆனால் என்ன செய்ய இங்கு பலபேர் நமக்கு எதுக்குடா வம்பு பேசாம போயிரலாம் என்ற மனப்பான்மையில் உள்ளார்கள்.

    நான் நிச்சயமாக தங்களின் கருத்துடன் உடன்படுகிறேன், திருட்டு என்பது திருட்டுதான் அதில் எந்த மாற்றுகருத்தும் இருக்க முடியாது.
    நியாயமாக நடக்கவேண்டுமானால் மென்பொருள் துறையில் ஒரு பயிலுகளும் இருக்க முடியாது
    மேலும் இது தொடர்வதால் நம் தமிழ் மக்களின் ஆக்கதிறன், படைப்புதிறன் பாதிக்கபடும் என்ற அச்சமே மேலோங்கியுள்ளது

    சரி மறக்காம வாக்கை பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  16. @Pandi

    வாக்களித்துவிட்டேன்.

    ReplyDelete
  17. @Jayadev Das
    நன்றி தலைவரே, நன்றி!! கண்கள் பனித்தன

    மற்றும் வாக்களித்த
    அனைத்து தோழர்களையும்
    அனைத்து என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்!!!
    நாடுகள் பல ஆண்டவர்கள் நம் தமிழ் முன்னோர்கள், ஆனால்
    இன்று தமிழ் இனம் நாடற்று, நாதிஅற்று கேட்பாறின்றி கிடக்கிறது, காலம் இப்படியே இருந்துவிட போவதில்லை,
    நிச்சயமாக அந்த எழுச்சிமிக்க, களிப்புமிக்க, உவகைமிக்க, மகிழ்ச்சிமிக்க நாள் விரைவில் வரும்.

    ReplyDelete