Jul 14, 2011

ரஜினியை கண்டுகொள்ளாத ரசிகர்கள்



நேற்று சிங்கபூரிலிருந்து உயிருடன் திரும்பிய ரஜினியை தமிழக மக்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை. அவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது வழக்கமாக சோறு தண்ணி இல்லாமல் முண்டியடித்து கொண்டு அவரை பார்க்க வரும் பன்னாடை ரசிக கூட்டங்களை காணவில்லை.

விமானத்தை விட்டு இறங்கியதும் பிரபலங்களிடம் பேட்டி காண மைக்கை மூக்கில் நுழைக்கும் பிரபல டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் யாரும் சொல்லிவைத்தார் போல் ஆப்சென்ட். ரஜினி சென்னை மண்ணை மிதித்தது, ஒரு பெட்டி  செய்தியாக கூட எந்த தினசரியிலும் வரவில்லை. கலைஞர் சொன்னது போல் தமிழகத்தில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது என்பது வலுவாய் நிரூபிக்க பட்டுள்ளது.

ரஜினியின் அலகு குத்தும் ரசிகர்களும், இப்போது இளம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களின் ரசிகர்களாக மாறிவிட்டதாக செய்திகள் கசிந்துருகுகின்றன. மேலும் ராணா படம் வெளிவருவதும் சந்தேகமாக உள்ளது. தீபிக படுகோன் பவர் ஸ்டாரின் லத்திகா பார்ட் - 2 படத்துக்கு தன் கால்ஷீட்டை தூக்கி கொடுத்து விட்டதாக வதந்திகள் உலவி வருகின்றன.

ரஜினிக்கு லாபம் என்று சொல்லப்படுகின்ற எந்திரன் படமே கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. மருமகன் தனுஷும் தான் நடிக்கும் படங்களில், இனி தாத்தா அல்லது அப்பா ரோல்களை மட்டுமே தன்னால் வாங்கி தர முடியும் என ஆறுதல் சொல்லியுள்ளார்.

தமிழக மக்கள் நடிகர்களின் பின்னால் போகாமல் தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இப்போதெல்லாம் ரஜினி சாப்பிட்டது, தூங்கியது மற்றும் @#$% போனது என சராசரி நிகழ்வுகளான எதிலும் மக்கள் துளியும் ஆர்வம் காட்டுவதில்லை. ரஜினி வீட்டில் உள்ள வேலைக்காரன் கூட அவர் சாப்பிட்டதை கண்டுகொள்ளாமல் அவர் சாப்பிட்டு வெகு நேரம் ஆகியும் அவர் தட்டை கழுவாமல் வைத்திருந்ததாக அரசல் புரசலாக செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக மீடியாக்கள் மற்றும் மக்களின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம் என்றும் சரியாக புலப்படவில்லை.

No comments:

Post a Comment