நேற்று தனது இருபத்தி நான்காவது வயதை அடைந்த வீர திருமகன் கசாபுக்கு நம் இந்திய பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்படியே மும்பை குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு தன்னால் முடிந்த அனுதாபங்களையும் தெரிவித்தார். "பாதுகாப்பு" போன்ற விசயங்களை அளிப்பது எதுவும் தன் கையில் இல்லை என்றும் கையை விரித்து காண்பித்தார். வாழ்த்தும், அனுதாபமும் தெரிவிப்பதே தன் தலையாய கடமையாக கொண்டு சிறப்பாக தொண்டாற்றிவரும் பிரதமரை அன்னை சோனியா காந்தியும் பாராட்டினார். பிரதமருக்கு பின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அனுதாபங்களை வரிசையில் நின்று தெரிவித்தனர்.
தன் பிறந்த நாளை கசாப் கேக் வைத்து கொண்டாட, அங்கே மும்பையில் அவரது தீவிர (வாத) நண்பர்கள் பட்டாசிற்கு பதிலாக குண்டு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள். காசாப் வெட்டிய கேக்கிற்குள் கேண்டிலுக்கு பதிலாக சின்ன சின்ன சிக்கன் லேக் பீஸ் துண்டுகள் வைத்து சிறை அதிகாரிகள் வழங்கியதாக தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சரை போல் அல்லாமல் குண்டு வெடித்த இடங்களுக்கு விரைந்து சென்று பார்வை இட்ட உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பிரதமர் உளமார பாராட்டினார். "இந்த தாக்குதலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் படும்?" என்ற கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் "சட்டம் எப்போதும் போல தன் கடமையை செய்யாது" என்று திட்டவட்டமாக சொன்னார்.
"இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி கவலை படும் போது, இது போன்ற தாக்குதல்கள் அதை சற்றே தணிக்கின்றன. இனி மும்பை மக்கள் அடுத்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்நேரமும் தயாராய் இருக்க வேண்டும். எவ்வளவு குண்டு போட்டாலும் அமைதியாய் எதிர்கொள்வதால் இந்தியா மற்ற நாடுகளுக்கு அமைதிக்கான முன்னுதாரணமாய் விளங்குகிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என்று நினைத்து இந்தியா மீதான தன் தாக்குதலை பாகிஸ்தான் விட்டு விடும்" என்று தெரிவித்தார்.
இந்த கொடுமைகளுக்கு ஒரு போதும் தீர்வுகள் கிடைக்காது நண்பா!! நீங்கள் எழுதியது ஒரு நாள் நிஜமாக நடக்கும் அப்படிப்பட்டவர்கள் நம் அரசியல்வாதிகள்
ReplyDeleteகமென்ட் போட வசதியாக word verification எடுத்து விடுங்கள் நண்பரே
ReplyDeleteநன்றி அசோக். வோர்ட் வெறிபிகேசன் நீக்கி விட்டேன்.
ReplyDeletegood and brave article.
ReplyDeleteவித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே ... மனித உயிருக்கு மதிப்பில்லாத தேசத்தில் எம்மக்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது...
ReplyDelete