May 5, 2012

சாரு race for ஜனாதிபதி போஸ்ட்



ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை முன் நிறுத்த, பா.ஜா.க அப்துல் காலாமை களத்தில் இறக்க, இந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு பெரும் அனல் பறக்கும் போட்டி இருந்து வந்தது. இந்த க்ளாடியேட்டர் களத்தில், இப்போது சாருவும் குதிக்கிறார். அதனால் போட்டி இன்னும் உக்கிரம் அடைந்துள்ளது. இந்த செய்தி வட இந்திய சேனல்களை எல்லாம் பரபரக்க, வாயில் நெருப்பை ஊதி fire டான்ஸ் ஆட வைத்துள்ளன.

சாருவிடம், இந்த ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எப்படி வந்தது? என்று Tamil Faking News சார்பாக பேட்டி எடுக்கையில்,

"ஒரு எழுத்தாளன் என்பவன் உலகம் முழுதும் சுற்றினால் தான், நல்ல உலக தரமான இலக்கியம் படைக்க முடியும். சொந்த காசில் ஊர் சுற்ற வேண்டும் என்றால், அந்த எழுத்தாளன் எழுதும் புத்தகம் லட்சக்கணக்கில் உலகம் முழுதும் விற்க வேண்டும். ஆனால் நான் எழுதிய "எச்சைல்" புத்தகத்தின் விற்பனை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதை தமிழ்நாட்டில் "கின்னஸ் சாதனை" என்று சொல்கிறார்கள். எனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளாவின் இந்த புத்தகத்தை டப் செய்து வெளியிட்டாலும், மேலும் ஒரு பத்தாயிரம் விற்கலாம். புத்தகம் வெளியிடுவது முதல், ரெமிமார்டின், டக்கீலா, பிராண்டேட் ஜாக்கி ஜட்டி வரை வாங்க அனைத்திற்கும் வாசகர் வட்டத்தையே எதிர் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் ஐ.டி யில் வேலை செய்பவனுக்கு காண்டம் கூட, கம்பனியே வாங்கி கொடுத்து விடுகிறது. ஆனால் என்னால் இனிமேல் ஜாவாவையும், டாட் நெட்டையும் படித்து முடித்து ஐ.டி.யில் சேர முடியாது.

அதனால் இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது பிரதீபா பட்டில் வெளிநாடு சுற்றி கின்னஸ் சாதனை படைத்த செய்தி தெரிய வந்தது. அதனால் தான் உலக இலக்கியம் படைக்க இந்த வழியை தேர்ந்தெடுத்தேன். பிரான்ஸ், எகிப்து, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளை சுற்றி பார்த்தால் தான் நல்ல இலத்தீன் இலக்கியம் படைக்க முடியும். அதனால் எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று சொன்னார்.


ஆனால் இவருக்கு எந்த கட்சி ஆதரவு கொடுக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ் நாடு காங்கிரஸ் இவரை ஆதரிக்குமா? என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கருத்து கேட்ட போது,

"சாருவா? இந்த பேரை கேட்டதும், கும் பிகராக இருக்கும் என்றல்லவா நினைத்தேன்." என்றார்.

திராவிட கட்சியான தி.மு.க, சாருவிற்கு ஆதரவு தரும் என்பதாக தெரிகிறது. சாருவிற்கு, கனிமொழியுடன் உள்ள இலக்கிய தொடர்பும், நட்பும், இதற்கு காரணமாக சொல்லப் படுகிறது.