Mar 21, 2012

அடுத்த படத்தில் கமலுக்கு ஆஸ்கார்.

இந்திய சினிமா வரலாற்றில், நடிப்பில் ஆஸ்கார் அவார்ட் வாங்க திறமையான நடிகர் பல நூற்றாண்டுகளாக ஒரு நடிகர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது ஒருவர் தான். 

"உலக" நாயகன் கமல் ஹாசன்.



ஹேராம், தசவதாரம், அவ்வை சண்முகி என நிறைய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையால் ஆஸ்கார் வாசலை வரை போய், ஏதும் கிடைக்காமல் திரும்பி வந்தார்.

நடிப்பு திறமை மட்டுமல்லாது கமலின் மற்ற ரசனைகளும் அதிகமாய் மக்களிடையே பரவலாய் பேசப் படுகிறது. குறிப்பாக உலக மொழி படங்களை பார்க்கும் அவரது ரசனை. நிறைய உலக மொழி படங்களை பார்ப்பதனாலேயே அவருக்கு உலக நாயகன் என்ற அடைமொழி வந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது. 

அவரது காத்திருப்புக்கு இப்போது விடிவு காலம் வந்து விட்டது. செல்வராகவன், கமலை வைத்து இயக்கவிருந்த "விஸ்வரூபம்" படம் டிராப் ஆகி அதை வேறு ஒருவர் இயக்குகிறார். அதனால் செல்வராகவன் கமலை வைத்து மீண்டும் வேறு ஒரு படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையை பற்றி, செல்வராகவன் நமது Tamil Faking நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், "ஆஸ்கார் வாங்குவதே தன் குறிக்கோள் என்று பல நூற்றாண்டுகளாக போராடும் ஒரு உண்மையான கலைஞனின் கதை. கதையின் படி, ஹீரோ ஒரு சினிமா நடிகர். இவர் கஷ்டப் பட்டு நடித்த படங்களை காப்பி அடித்து, நடித்த ஹாலிவுட் ஹீரோக்கள் மிக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். பின்னர் மறுபடியும் கஷ்டப்பட்டு நடித்து படத்தின் கிளைமாக்ஸ் சீனில், கமல் ஆஸ்கார் வாங்குகிறார்." என்றார்.

ஹாலிவுட் நடிகர் கேரக்டர் உட்பட இந்த படத்தின் எல்லா கேரக்டர்களையுமே கமலே செய்யவிருப்பது இந்த படத்தின் சிறப்பம்சம். இதற்காக நிறைய கண்டைனர் லாரிகளில் மூட்டை மூட்டையாய் மைதா மாவுகள் வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படவுள்ளன. 


No comments:

Post a Comment