Mar 19, 2012

கலைஞரின் அடுத்த உண்ணாவிரதம், சிரிப்பொலி டிவியில் நேரடி ஒளிபரப்பு

இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆரம்பிப்பதாக இருந்த, கலைஞரின் உண்ணாவிரதம் பெரும் வெற்றியடைந்தது.



இலங்கையில் நடைபெற்று கொண்டிருந்த போரை நிறுத்த கோரி, மெரீனா பீச்சில் அரை நாளுக்குள் அரங்கேற்றம் நடத்திய முதல் உண்ணாவிரத வெற்றி, உலகப் புகழ் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முதல் பக்க பெட்டி செய்தியில் அப்போது வெளியானது.

ஆனால் இவர் இரண்டாம் உண்ணாவிரதத்தால், முதல் உண்ணாவிரதத்தை முறியடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவிருக்கிறார். சச்சினை போல தொடர் சாதனை புரிந்து அவுட் ஆகாமல், நூறு உண்ணாவிரதம் காண Tamil Faking நியூஸ் வாழ்த்துகிறது.

"கலைஞரின் உண்ணாவிரத செய்தி எங்களை எட்டியதும் எங்களுக்கு அவரது முதல் உண்ணாவிரதம் நியாபகம் வந்தது. இன்னொரு உண்ணாவிரதத்திற்கு இந்த உலகம் தாங்காது என்பதால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்" இவ்வாறு சோனியா நமது Tamil Faking நியூஸ்க்கு பேட்டியளித்தார். அருகில் இருந்த மன்மோகன் சின் ஆமாம் என்பது போல் தலையசைத்துக் கொண்டே இருந்தார்.

கலைஞர் தாத்தாவின் இந்த உண்ணாவிரத வெற்றியின் சூட்சுமம் என்னவாக இருக்கும் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளார் அன்னா ஹசாரே. "கலைஞரிடம் இருந்து அன்னா ஹசாரே எப்படி உண்ணாவிரதம் இருப்பது? என்பதை நிறைய கற்று கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்த தொடர் உண்ணாவிரத வெற்றியால், "அண்ணா நூற்றாண்டு நூலகம் இடித்தால் நான் தீக்குளிப்பேன்" என்று கலைஞர் அசட்டையாக தனக்கே தெரியாமல் உளறியதை வாபஸ் வாங்கி கொண்டு, அதற்கு பதில் அடுத்த வாரம் முதல் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கூறினார். 

இதனால் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்க தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஷாட் காட்சிகளை படம் எடுக்க, கலை இயக்குனர் தோட்டா தரணியை வைத்து ஒரு பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். கட்டில், மெத்தை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனவாம். இரு மனைவிகள் சகிதம் கட்சி அடிப்பொடிகளுடன் தலைவர் அடுத்த வாரம் ஆஜர் ஆகிவிடுவார்.

                                 

இந்த விஷயம் கேள்விப் பட்டதும், போயஸ் கார்டன் பகுதியில் 1.6 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஹெக்டர் அளவுகோலில் பதிவானது.  

எடியுரப்பாவும் தன்  இழந்த முதல்வர் பதவியை மீட்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கர்நாடகாவிலிருந்து நம் சிறப்பு நிருபர் தெரிவித்தார். இதைடுத்து பா.ஜா.க தலைமை இடத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.
 


No comments:

Post a Comment