Aug 22, 2012

தனி துறையாகிறது, டாஸ்மாக்!

டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டு பட்ஜெட்டின் நதிமூலம் ரிஷிமூலம் ஆகிவிட்டதால் அதற்கென்று ஒரு தனித்துறையை உருவாக்குகிறது அரசு.

இச்செய்தி தமிழ்நாட்டு குடிமகன்களின் காதில் பீராய் பாய்ந்து, ஏகபோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ் நாடு அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக ஒரு செய்தி உலவி கொண்டிருக்கிறது. இந்த செய்தியை நம்பி தமிழக குடிமக்கள் அக்டோபர் மாதம் பாண்டிச்சேரிக்கு பஸ்சிலும், ட்ரெயினிலும் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டனர். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்களும் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

"தற்போது உலவிக் கொண்டிருக்கும் செய்தி வெறும் வதந்தி தான்! அதை யாரும் நம்ப வேண்டாம்" என அமைச்சர் பன்பீர் செல்வம், நமது TFN-க்கு செய்தியளித்தார்.

இந்த வதந்தியை தடுக்க சிறிது நாட்களுக்கு Group Message வசதியை தடை செய்ய செல்போன் கம்பனிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட்டு கை நடுங்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.



டாஸ்மாக் தனித்துறையாக மாற்றப் பட்ட பிறகு கீழ்க்கண்ட கவர்சிகரமான, தூக்கலான திட்டங்களை அரசு அறிமுகப் படுத்துகிறது.

கடன் அட்டை வசதி: இனி பில்லிங் மெசின் சிஸ்டத்தை நடைமுறை படுத்த உள்ள நிலையில், சில்லறை பிரச்சினையை தடுக்கவும், ஏழை எளியோரும் கடன் வாங்கியாவது சரக்கு வாங்கி, மட்டையாவதற்கு உதவியாக கிரெடிட் கார்டு பேமென்ட் வசதி வரவுள்ளது.

டாஸ்மாக் கார்ட்: Lifestyle போன்ற துணிக்கடையில் இருப்பது போல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக டாஸ்மாக் கார்ட் அறிமுகப் படுத்தப் படுகிறது. இதன் மூலம் நீங்கள் வாங்கும் சரக்கின் விலை கணக்கெடுக்கப்பட்டு, அது ஐயாயிரம் ரூபாயை அடையும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு பாரின் சரக்கு இலவசமாய் கொடுக்கப் படும். அது ஐம்பதாயிரம், லட்சம் என தாண்டும் போது Elite, Premium என நிறைய பிரிவுகளில் கார்டுகள் Upgrade செய்யப் பட்டு, வாங்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் 5%, 10% தள்ளுபடி கொடுக்கப் படும்.

ஹோம் டெலிவரி: ரூபாய் ஆயிரத்திற்கு மேலாக சரக்கு வாங்குபவர்களுக்கு ஹோம் டெலிவரி செய்யப்படும். இதனால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், தேவையில்லாத சண்டைகளை தவிர்க்கவும் வழிவகை செய்யப் படும்.

காப்பீட்டு திட்டம்: சரக்கு அடித்து வயிறு புண்ணாகும் குடிமகன்களின் நலன் கருதி அவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தேவையான மருத்துவ சேவையை அளிக்கவும் வசதி செய்யப் படும். மப்பு அதிகமாகி, டாஸ்மாக் வாசலிலேயே விழுந்து கிடக்கும் அன்பர்களை தூக்கி கொண்டு போய் அவரவர் வீட்டு வாசலில் போட ஆம்புலன்ஸ் வசதியும் வருகிறது. 

குடிப்போர் நலச் சங்கம்: இதன் மூலம் குடிமகன்களின் பிரச்சினை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க படும். "டூப்ளிகேட் சரக்கு", "கூலிங் இல்லாமை" போன்ற தங்கள் குறைகளை சங்கத்திற்கு சொல்ல ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப் படும்.

டபுள் டமாக்கா: இரவு பத்துமணிக்கு மேல் பிளாக்கில் சரக்கு விற்பதை தடுக்க, அரசே அதை இரட்டிப்பு விலையில் விற்கும். இந்த விலை காலை ஆறு மணி வரை நடைமுறை படுத்தப் படும்.

போலிஸ் பாதுகாப்பு: இங்கு அதிக கலெக்சன் ஆவதால் பணம் கொள்ளை அடிப்பதை தடுக்கவும், ஆயுதம் ஏந்திய போலீசார் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தள்ளாடாமல் நிறுத்தப் படுவர். முதல் முறை குடித்து விட்டு பிரச்சினை பண்ணுபவரும், குடிக்காமலே பிரச்சினை பண்ணுபவரும் லாக்கப்பில் அடுத்த நாள் காலை வரை அடைக்க படுவர்.




இந்த திட்டத்தை பீர் குலுக்கி வரவேற்று பேசிய "தூ.தி.மு.க" கட்சி தலைவர் குஜயகாந்த், "அடுத்த தேர்தலிலும் ஆளும் கட்சியை, தங்கள் கட்சி சப்போர்ட் செய்ய வேண்டுமானால், டாஸ்மாக் துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என தெயிவித்தார்.

டாஸ்மாக்கை தனி துறையாக மாற்றுவதை எதிர்த்து "மாங்கா" கட்சி தலைவர் ரோமதாஸ் அவர்கள் காத்ரினாவின் தலைமையில் நாடு தழுவிய பூட்டு போடும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். தன் கட்சி சின்னதை கூட "மாங்கா"விலிருந்து, பூட்டிற்கு மாற்றப் போவதாய் தெரிவித்தார்.


டெயில் இமேஜ்:




Related Post: 

டாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்