"கச்சத்தீவுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை அரசும், தலைநகர் டெல்லிக்கு சென்று தொண்டாற்றும் தமிழக அமைச்சர்களை சிறைபிடிக்கும் இந்திய அரசும், தமிழர்களுக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன" என்று அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், தன் சிறந்த முயற்சியால் மத்திய அரசிடம் பேசி, இன்று விடுதலை செய்ய வைத்த ஜெயலலிதாவை பாராட்டிவிட்டு, அப்படியே திகாரில் இருக்கும் தமிழர்களையும் வெளிக்கொணர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்து நிருபர்களின் கேள்விகளுக்கு விடையளித்த கருணாநிதி, "மத்திய அரசியலில் இருந்து தி.மு.க விலகுமா? என்ற கேள்வியே தேவையில்லை எனவும். இரு கட்சிகளுக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை, எப்போதும் போல நல்லுறவு தொடரும்" என அடுத்த பொதுக்கூட்டம் கூட்டி அறிவிப்பதாயும் தெரிவித்தார்.
"லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரை கொண்டுவருவது சரியா?" என்ற கேள்விக்கு,
"பிரதமர் ஏற்கனவே வரம்புகளுக்குள் தான் இருக்கிறார்" என வழக்கம் போல அவருடைய பாணியில் பதிலளித்தார்.